பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 துக்கள் எந்தக் காலத்துக்கும் ஏற்புடையனவாகும் என்ற உண்மையை மு. வ. அவர்கள் பலவகையில் விளக்கி, இந்த நூற்றண்டில் வாழும் நம் வாழ்வில் அது விளங்கப் பெறுவதையும் விளங்க வேண்டுவதையும் சுட்டுகிருர். இவர் ஆய்ந்த முறைகளையும் காட்டிய விளக்கங்களை யும் எண்ணிப்பார்த்தல் என்பது இயலாது. எனினும் சில வற்றைக் காட்டல் என் கடமையாகும். அதிலும் நான் பு தி தாகக் காட்டாமல் திரு வி. க. அவர்கள் எடுத்துக் காட் டியவற்றுள் சிலவற்றையே ஈண்டு குறிக்க நினைக்கிறேன். இதோ மு. வ. அவர்கள் கூறியவை: "ஆண் பெண் இருவரின் இருவேறு மனங்கள் ஒன்று மற்ருென்றில் கரைந்துபோகும் தன்மையைக் காமத்துப்பால் கூறுகின்றது; கணவனும் மனைவியு மாகிய இருவர் ஒருமனம் உடையவராய் உலக நன்மை கருதி வாழும் தன்மையை இல்லறம் காட்டுகிறது.” 'அக்காலத்தில் வாழ்க்கைப்போர் பொதுவாக இருந்தது; உலகத்திற்குப் பொதுவாகப் பெய்யும் மழையே காரணமாக இருந்தது; இக்காலத்து வாழ்க் கைப்போர் பெரும்பான்மையான மக்களுடையதாக இருந்தாலும் தனித்தனியாக அமைந்திருக்கின்றது. சி ல ரி ைட யே குவியும் பணம் காரணமாக இருக்கின்றது.” 'உலகத்தில் உள்ள விபசாரத்தில் பெரும்பங்கு பொருளுடையவரின் மயக்க வலையில் பொருளில்லாத வறியர் வீழ்ந்து அகப்பட்டுக்கொள்வதால் நிகழ்வ தாகும்...வறுமையின் நெருக்கடி தாளமுடியாமல் பலர் ஒழுக்கக்கேட்டிற்கு ஆளாகின் ருர்கள்.' "இயற்கையில் கடவுள் தன்மையைக் கண்டு போற்றுவது உயர்ந்த நெறி. இயற்கையில் அமைந் துள்ள பலவற்றிலும் மழை மிகச் சிறந்தது. உலக