பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'டானா முத்து / 13


வேலையைப் பாருடி! வேதனை தீரும்!
சாலைப் பக்கம் சாய்க்காதே கண்ணை
ஓலைப் பெட்டியை நகர்த்தடி! புகையிலை
சேலையில் முடிய மறந்தேன்! கொடுடி!"

தோழி ரத்தினம் இப்படிச் சொன்னாள்!
கோழி, பூனைக் குட்டிகள் துணையாய்
நாழி அரிசியில் நாட்களை ஓட்டி
நாழிகை தோறும் பார்வதி உழைத்தாள்!

மெல்ல மெல்ல முத்துவின் நினைவும்
சல்லடை வழியே தண்ணீர்த் துளிபோல்
செல்லவே மூக்கன் பட்டியின் கழனிக்
கொல்லையே கதியாய் பார்வதி கிடந்தாள்!

அத்தை வீட்டில் கோவில் ஆடாய்
நித்தமும் வயிறு நிரம்பத் தின்றுப்
பித்தனாய் அடங்காதப் பேயனாய் ஆன
முத்து, பஞ்சுடன் பட்டினம் போனான்!