பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14/ வயலூர் சண்முகம்


சின்ன வயதிலே சிகரெட் ஊதவும்
கன்னா பின்னாவெனக் கத்திச் சிரித்துப்
பொன்னான பொழுதைச் சூதாடிப் போக்கவும்
தன்னையும் மறந்து கற்றான் முத்து!

பஞ்சுவும் முத்துவைப் பகடையாய் உருட்டி
அஞ்சு பத்தாய்ப் பணத்தைக் கரைத்தான்!
கொஞ்ச நாளிலே கூலியா ளாகப்
பஞ்சையாய் முத்துவை நடத்த லானான்!

கையில் உள்ள காசும் தீர்ந்தது!
பையில் உள்ள பணமும் தீர்ந்தது!
பொய்யாய் முத்துவைப் படத்தில் நடிக்க
வைப்பதாய்ச் சொன்ன பஞ்சுதான் நடித்தான்!

“சோதனை என்பது சாதனைக் கேயடா!
வேதனை எல்லாம் வினாடியில் தீர்ந்திம்
தோதாய் சினிமா வாய்ப்பு வந்திடும்!
ஆதலால் முத்து வருந்தாதே!" என்றான்.

எப்படி யேனும் படத்தில் நடித்து
கப்பல் போன்ற காரும்; வீடும்
முப்பது நாற்பது இலட்சமும் சேர்க்க
சொப்பனம் கண்டான் மீண்டும் முத்து!