பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 / வயலூர் சண்முகம்

தங்க மோதிரம் ஒன்றை விற்று
எங்கோ மூலை; முடுக்கில் எல்லாம்
'ரெங்கு' என்னும் ரிக்க்ஷாக் காரனுடன்
தங்கும் விடுதிகளில் தங்கி அலைந்தான்!


கடைசியில் பஞ்சு கரகரத்தக் குரலில்
"அடையாறு பக்கம் எனது மாமா
கடைவைத் திருக்கிறார்! கட்டாயம் அவரால்
நடக்கும் நமது காரியம்!" என்றான்!


சிங்கப்பூர் பேண்ட்டும்;டெரிலின் சட்டையும்
லுங்கிகளும் சேர்த்து இருநூறு ரூபாய்க்கு
ரெங்கு மூலமே விற்றான் முத்து !
சங்கிலி மட்டும் கழுத்தில் இருந்தது!


கையில் கொஞ்சம் பணத்தைக் கண்டதும்
பையன் களுக்கு குஷியும் வந்தது
 நெய்யிலே செய்த இனிப்புகளாக
"மைலாட்ஜ்" என்னும் ஹோட்டலில் முழுங்கினர்!


அன்று பகலே ஆபாச சினிமா
ஒன்றுக்கு 'பிளாக்'கில் டிக்கட்டு வாங்கிச்
சென்று பார்த்துத் திரும்பினர் லாட்ஜுக்கு!
பன்றிகள் போல இரவும் தின்றனர்!