பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'டானா' முத்து /17

ஒத்தை சிகரெட்டை ரெண்டு ரூபாய்க்கு
மெத்தவும் ஆசையாய் பஞ்சு வாங்கி
“நித்தமுமா குடிக்கிறாய்? ஏதோ ஒரு நாள்!!
முத்து! முத்து! குடிடா!” என்றான்


எடுத்து வந்த பணமும் நகையும்
அடுத்து அடுத்தே பாழாய்ப் போனதால்
படுத்தும் தூக்கம் இல்லா முத்து
குடித்தான் அந்த உசத்தி சிகரட்டை!


அஞ்சாறு நிமிடத்தில் ஆனந்தத் தூக்கம்
கொஞ்சி வந்தது! கொட்டாவி விட்டான்!
நெஞ்சில் அத்தையின் நினைவுகள் சுழன்றன!
பஞ்சுவும் சிரித்து "குட் நைட்!"என்றான்!

*****

3

முதுகில் தட்டி யாரோ தன்னை
அதட்டி எழுப்பக் கண்களைத் திறந்து
மெதுவாய்ப் பார்த்த முத்து திகைத்தான்!
பதினொன் றரைமணி,பொழுது விடிந்தது!