பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'டானா' முத்து/19

போட்ட சட்டை வேட்டி யோடே
ரோட்டின் ஓரம் பசியால் மயங்கி
ராட்டினம் போலக் கண்கள் சுழல
கூட்டம் கூட முத்து விழுந்தான்!

நல்ல வேளை ரிக்க்ஷா ரெங்கு
சொல்லி வைத்தது போல வந்தான்
"எல்லோரும் விலகுங்க!" என்றே முத்துவை
மல்லாக்க நிமிர்த்திப் படுக்க வைத்தான்!

“என்னா நைனா ? சினிமா ஸ்டாரு
பன்னு தின்னு: டீயைக் குடீப்பா!'
என்றெல்லாம் நைசாய் உபச்சாரம் பண்ணினான்!
தன்னா லானதைச் செய்வதாய்ச் சொன்னான்!

முத்து வுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய்ப்
புத்தி தெளிந்தது! பஞ்சுவின் மோசடி
குத்தும் முள்ளாய் நெஞ்சைக் கீற
அத்தையின் நினைப்பும் பயமும் சூழ்ந்தன!

ரெங்கு அதட்டினான், “என்னா ரோசனை?
எங்கே போவப் போறே இனிமே...?
இங்கே உள்ள பசங்க ளுக்கே
சிங்கிள் டீக்கு வழியைக் காணோம்...!”