பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘டானா' முத்து / 21

அத்தையின் முகத்தில் விழிக்கப் பயந்து
சித்திரை வெயிலில் கால்கள் பொசுங்க
உத்தமர் மாமா ஊரை நோக்கி
பத்துப் பதினைந்து மைல்கள் நடந்தான்!

பனியூர் என்பது பழைய கிராமம்!
கனிதரும் சோலைகள் காய்கறித் தோட்டம்
இனிமையாய்ப் பாடும் பறவைகள் நிரம்பிய
தனிமை யான ஊரே அதுவாம்!

பழைய ஊர்தான்! மக்களும் மிகுதி!
கழனியில், காட்டில் கட்டட வேலையில்
உழைக்கும் மக்களே அவ்வூர் வாசிகள்!
அழைக்கும்; அணைக்கும் பண்பிலே சிறந்தோர்!

முன்னம் ஓர்நாள் கோபத் தோடு
சென்று பிரிந்து பனியூரில் வாழ்ந்த
மன்ற வாணர் முத்துவின் தாய்க்கு
முன்னே பிறந்த முறைமா மனாவார்!