பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22/ வயலூர் சண்முகம்


அந்த மன்ற வாணரிடம் 'தம்பிபோல்
சொந்தம் கொண்டாடி மாணவ ராகி
செந்தமிழ்ப் புலமையும் ஆங்கில அறிவும்
விந்தையாய்க் கற்றவர் தணிகா சலந்தான்!

பனியூர் பள்ளி புகழ்மிகக் கொண்டது!
இனிய காலை எட்டு மணிக்கே
பணியைத் தொடங்கிப் பகல்மணி ஒன்றுடன்
கணக்காய்க் கல்வி அலுவல்கள் முடிந்திடும்!

இப்படிப் பள்ளி அலுவல்கள் எல்லாம்
முற்பக லோடு முடிந்து விடுவதால்
அப்பள்ளி மாணவர்; ஆசிரியர் எல்லாம்
பிற்பகலில் தம்தம் பிறவேலை பார்ப்பர்!

ஆசிரியர் தணிகாசலம் அசராது உழைப்பவர்!
பேசிப் பேசியே பொழுதைப் போக்கார்!
பாசத் தோடே, பண்புக ளோடே
ஆசையாய்க் குடும்பம் நடத்தி வந்தார்!

மனதால் உழைப்பவர்! மதியால் உழைப்பவர்
அனைத்துப் பொழுதிலும் அன்பால் உழைப்பவர்!
தனது குடும்பத்துடன் சமூகத்துக்கும் உழைப்பவர்,
பனியூர் தணிகாசலம் பெருமகனார் ஒருவரே!