பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 / வயலூர் சண்முகம்

நெய்யும் பாலும் காயும் கனியும்
தெய்வ நாயகியின் "தேவாமிர்த"ச் சமையலும்
தையல்கள்; பிள்ளைகளின் தளராத பாசமும்
மெய்யாய் அவரைப் பூரிக்க வைத்தன!

அழகு நம்பி அன்றைய தினத்தில்
முழுதும் பள்ளி அலுவலில் மூழ்கி
பொழுது சாயும் வேளையில் பனியூர்
வழியில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்!


சாலை ஓரம் சுமைதாங்கி அருகே
ஓலைத் தடுக்கில் அங்காடி விற்கும்
வேலாயி கிழவியிடம் அப்பொழுது ஒருவன்
'வாலாட்டி' உதைகள் வாங்கிக் கொண்டிருந்தான்!


“அடிக்காதே அவனை! விட்டு விடெ'ன்று
பிடித்துப் பையனை விலக்கி விட்டுக்
கடைக்காரி யிடத்தில் காரணம் கேட்டான்
இடையே புகுந்த அழகு நம்பி!