பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32/வயலூர் சண்முகம்



"மாமா! மாமா!" என்று தேம்பி
'காமா சோமாவாய்' ஏதோ உளறினான்!
"ஆமாம்...! முத்து, இங்கே எப்படி?”...
தாமாகவே கேட்டார் தணிகா சலந்தான்!

நண்பன் ஒருவன் பேச்சைக் கேட்டுக்
'கண்ணன் பேக்கரி' என்னும் கடைக்கு
பண்டங்கள் விற்கும் பணியாள னாகச்
சென்னைக்கு முத்து சென்றதாகவும்

வேலைக் கிடைக்க வாய்ப்பும் இன்றி
காலிப் பயல்களால் கைப்பணம் இழந்து
வேளை தோறும் பட்டினிக் கிடந்து ஆளேப் பிழைத்தது அதிசய மாக

சொந்த ஊர்போக விரும்பி டாமல்
வந்த தாகவும் அழகு நம்பி
தந்திர மாகத் தன் குடும்பத்தாரிடம்
நொந்த முத்துவைக் காட்டிக் கொடுக்க