பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38 / வயலூர் சண்முகம்




புதிய மனிதனாய்ப் புத்தி சாலியாய்
எதையும் செய்யும் இயல்புள் ளோனாய்
விதியையே மாற்றிய வீரனாகவே
மதிமுக அன்னத்தால் மாறிவிட்டான்!


மூக்கன் பட்டியின் நினைவு முளைத்துத்
தூக்கத்தில் கூட அத்தையைத் துதித்தான்!
ஏக்கம் கொண்டான்! ஏதோ நல்லதோர்
நோக்கத் துடனே நாட்களைக் கழித்தான்!


ஈட்டுதல் போல எஞ்சிய நிதியை
வீட்டுக் குடும்பம் பிற்காலம் வாழ;
நாட்டுத் தொழில்கள் தொண்டுகள் வளர
கூட்டுக் கணக்கில் ஆசிரியர் சேமித்தார்!


ஒவ்வொரு குடும்ப உறுப்பி னருக்குமே
ஒவ்வு மாறு ஊதியம் தந்தார்!
அவ்வகையில் மனைவி மக்கள் ஆகியோருடன்
செவ்வையாய் முத்துவும் சேமிக்க வைத்தார்!