பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42/வயலூர் சண்முகம்

வந்தவன் போனதில் வருத்தம் இருப்பினும்
சிந்தையில் முத்துவின் சேவை இனித்தது!
முந்தைய 'டானா' முத்துவா, அவன்தான்?
வந்துவிடு வானென கவலை விடுத்தனர்!

மூக்கன் பட்டியில் முத்துவின் அத்தைப்
போக்கிரி ஒருவனைப் பொல்லா வேளையால்
ஆக்கிய பயிர்களை அனுசரனை யாகக்
காக்கச் சொல்லிக் கைப்பணமும் கொடுத்தான்!

நிலத்தில் இருந்த மரங்களை வெட்டியும்;
குளத்தில் இருந்த மீன்களைப் பிடித்தும்
விலைகொடுக் காமலேயே பழங்களைப் பறித்தும்
அலைக்கழித்து விட்டான் அந்தப் போக்கிரி!

அத்துடன் பார்வதி உடம்பும் கெட்டது!
பித்த மயக்கமும் இடுப்புப் பிடிப்பும்
சித்திரவதை செய்தன! எவரும் கனிவுடன்
ஒத்தாசை செய்யவோ முன்வர வில்லை!