பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'டானா' முத்து /45

சகவாச தோஷத்தால் தான்கெட் டதையும்;
மிகமிகத் துன்பம் அவமானம் பட்டதையும்
வகையாய்த் தணிகாசல மாமா உதவியால்
புகழ்பெறத் திருந்தி வந்ததையும் உரைத்தான்!


தனது பெயரால் சாசனம் முடித்து
மனைக்கட்டுப் புஞ்சை மாந்தோப்பு எல்லாம்
தினமும் பார்வதி காத்த செய்திகள்
அனைத்தும் முத்துவும் அறிந்து மகிழ்ந்தான்!


மாமா வீட்டில் முத்து கற்றது
சாமான்ய அறிவா? சாதாரணக் கல்வியா?
கோமாளித் தனங்கள்; குரங்குத் தனங்கள்
ஏமாளித் தனங்கள் எல்லாம் விட்டான்!


கெட்டுப் போனதால் பட்டினம் போனவன்
பட்டினம் போனதால் மேலும் கெட்டான்!
பட்டிக்காட்டு மாமா வீடே
கெட்டிக் காரனாய் முத்துவை ஆக்கியது!

★★★★★