பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



56/வயலூர் சண்முகம்



அந்தக் குடும்பம்; வீட்டுக்குள்
அண்டிப் பிழைத்து வாழ்ந்திடவே
வந்தப் பையன் வேலுவுக்கு
வாதைகள் வந்தன, கோதையினால்!

மாடு மேய்க்க வந்தவனே
மாடு மாதிரி உழைத்திட்டான்!
காடு கரம்புத் தோட்டத்தில்
காரியம் யாவும் செய்திட்டான்!

காலை மாலை இருபொழுதே
கஞ்சிச் சோறு போட்டிடுவாள்!
மூலை மாட்டுக் கொட்டிலிலே
முடங்கிக் கிடக்கச் சொல்லிடுவாள்!

சாதுப் பையன் வேலுவுந்தான்
சாமி கொடுத்த வரமாக
ஆதி நாளில் இருந்திட்டே
அருமையாய் வேய்ங்குழல் ஊதிடுவான்!

புல்லாங் குழலைப் பிடித்தவன்தான்
புதுப்புது சினிமாப் பாடல்களை
எல்லோர் மனதும் களித்திடவே
இனிமை யாக ஊதிடுவான்!