பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64 / வயலூர் சண்முகம்


கூடை, முறங்கள்; மண்வெட்டி;
கோடாலி பாறை; சுமந்திட்டே
ஆடை கூடச் சரியின்றி
அடுத்த மாவட்டம் செல்கின்ற


தங்கள் உறவு மக்களுடன்
தாங்களும் போக வேண்டுமென
தங்க ராசுவை கோபித்தாள்!
தவியாய்த் தவித்தாள் கோதைதான்!


கறுப்பு வந்ததன் காரணமே
'காக்கா வலிப்புப் பயல்' தானாம்!
அறுப்பு; குவிப்பு பொசிப் பெல்லாம்
அழிந்தது வேலுப் பயலாலாம்!


“வேலுப் பயலைத் துரத்தி விட்டு
மிச்ச நாளில் உயிர்பிழைக்க
நாலு பேரைப் போல்நாமும்
நாளையே போவோம் அயலூர்க்கே!