பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68 / வயலூர் சண்முகம்


கருகிக் கிடக்கும் பனந்தோப்புள்
'கங்காணி மோடு’ எனுமிடத்தின்
அருகே வந்த உடனேயே
அவனுக்கு வலிப்பு வந்ததுவே!

மாமா கூட 'கங்காணி
மோட்டு’ப் பக்கம் வருவதில்லை!
சாமியார் ஒருவர் அவ்விடத்தில்
சமாதி ஆனதாய்க் 'கதை' யுண்டு!

பூதம்; பிசாசு மோட்டுக்குள்
பதுங்கி இருப்பதாய்க் 'கதை'யுண்டு!
ஆதலால் யாரும் மோட்டருகே
எட்டிப் பார்க்கவும் பயந்தார்கள்!

ஆனால் சாமி வேலுவுக்கே
அன்று மனமே சரியில்லே
போனான் அந்தக் கங்காணி
மோட்டில்! மயக்கம் போட்டிட்டான்!