பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70 / வயலூர் சண்முகம்


காக்கும் நண்பன் வீழ்ந்ததையே
கண்ட கந்தன் துடிதுடித்தே
நாக்கால் தடவி முகர்ந்திட்டே
நான்கு புறங்களும் சுற்றியதே!


“லொள்! லொள்!!” என்றே குலைத்திட்டே
அங்கும் இங்கும் தாவியதே!
முள்ளிலும் கல்லிலும் வீழ்ந்தடித்தே
முதலாளி வீட்டுக்கு ஓடியதே!


கோதையும் நாதனுமே அங்கிருந்தார்!
குலைத்த நாயை விரட்டிவிட்டார்!
பாதை வழியே திரும்பியது!
பாலத்தைத் தாண்டி ஓடியது!


அம்மன் கோயில் திடல் நோக்கி
ஐம்பது அறுபது ஆண்பெண்கள்
 “சும்மா வாங்க!” என்றதட்டித்
தொடரும் பிள்ளைகளுடன் சென்றார்கள்