பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 /1 வயலூர் சண்முகம்


அடுத்த நிமிடமே அதிகாரி
அந்தக் காரை விட்டுவிட்டு
மிடுக்காய் ஜீப்பில் குதித்தேறி
விரைந்தார் கங்காணி மோட்டுக்கே!

★★★★★

7

'காக்கை வலிப்பு' நோயுள்ளோர்
காலால் நடந்து போகையிலே
தேக்கமாய் ஓட்டமாய் நிலத்தடியில்
தண்ணீர் இருந்தால் வலிப்பு வரும்!


கங்காணி மேட்டின் பக்கத்தில்
கணக்காய் வேலு வீழ்ந்ததனால்
அங்கே நிலத்தின் ஆழத்தில்
அவசியம் தண்ணீர் இருக்குமென


அந்த அரசு அதிகாரி
அறிந்து கொண்டதால்,ஆய்ந்திட்டார்!
வந்த வேளை நல்வேளை!
வற்றா நீரின் ஊற்றோட்டம்,