பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘டானா முத்து' 75

கங்காணி மேட்டின் அடியிலேயே
கச்சிதமாய் ஒடுவதைக் கண்டறிந்தார்!
பங்கறை ஏதும் இல்லாமல்
பருகவும் பயன்படும் நீரதுதான்!

அந்த இடங்களில் பலகுழாய்கள்
அமைத்துக் கொடுத்தார், மிக விரைவில்
அந்தப் புங்கம் பட்டிக்கே
அதிசயம் வந்தது அதனாலே!

★★★★★

8

“காக்கா வலிப்புக் காரனென
கண்டவரும் இகழ்ந்த வேலுவினால்
ஆக்கமும் வளமும் பெருகிவர
அற்புதமாய்த் தண்ணீர்ப் பொங்கிற்றே!

'தண்டச் சோறு' என்றெல்லாம்
தாக்கிப் பேசிய கோதையும்
கொண்டாடித் தழுவி வேலுவையே
கண்ணீர் வழிய வாழ்த்திட்டாள்!