பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76 வயலூர் சண்முகம்


நாதனும் புத்தி திருந்தி விட்டான்!
நட்பாய் பழகினான் வேலுவுடன்!
ஆதரவாய் இருந்த நங்கைக்கும்
அளவிலாப் பெருமை வேலுவினால்!

★★★★★

'கந்தன்' 'வேலு’ இருவருமே
கண்மணிகள் ஆயினர் ராசுவுக்கே!
சொந்த நிலத்தில் பனந்தோப்புள்
தோன்றிய அதிசய நீரூற்றை,

வழிபடும் தெய்வமாய், தேவதையாய்
வணங்கி மகிழ்ந்தார் ராசுவுமே!
பொழிந்திடும் நீரின் புதுஊற்றால்
புங்கம் பட்டியே தழைத்ததுவே!

தீராப் பஞ்சம் தீர்ந்திடவே
தெய்வம் போல உதவிட்டச்
சீராளன் வேலு நோய்தீரச்
சிறப்புப் பணமும் அளித்தார்கள்!