பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘டானா முத்து 77

தெய்வத்துக்கும் கோபம்

இரவு நெருங்கும் நேரம் - ஊர்த்
தெருவில் தோப்பின் ஓரம்
கடுக டுக்கும் கிழவி - சந்தைக்
கடை முடித்து வந்தாள்!

வீட்டைத் திறந்து நுழைந்தாள் - பசிச் சேட்டை தன்னால் குழைந்தாள்!
வடித்து வைத்த சோறு - மிளகு
பொடித்து வைத்த சாறு


இருந்த சட்டிகள் காலி - யாரோ
புரிந்த திருட்டு ஜோலி!
கோபம் பொங்கல் ஆச்சு - வயிறு
சாபம் கொடுக்க லாச்சு

அந்த வேளை ஏதோ - சத்தம்
வந்த பக்கம் மீதே
மெல்ல எழுந்து போனாள்
துள்ளக் குமுற லானாள்