பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80/வயலூர் சண்முகம்


துட்டைக் கொடுத்தான் கிட்டு - ஒரு
லட்டைக் கொடுத்தார் சேட்டு
துட்டில் எடுத்தான் ஒட்டம் - சேட்டு
துட்டில் விட்டார் நோட்டம்!

எட்டிப் போனக் கிட்டுக் - கொஞ்சம்
பிட்டுத் தின்றான் லட்டை
தூக்கி எறிஞ்சான் லட்டை!
- ச்சீச்சீ "போக்கிரி” என்றான் சேட்டை

துட்டை வீசினார் சேட்டு - கிட்டை
"ரெட்டை வாலு” என்றார்!
லட்டு என்ன லட்டு? - முழுசும்
கெட்டுப் போன லட்டு!

துட்டு என்ன துட்டு? - பழைய
மொட்டைத் தலையின் தட்டு
லட்டுக் கேற்ற துட்டு - அந்தத்
துட்டுக் கேற்ற லட்டு

ぐ><><>