பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

டால்ஸ்டாய் கதைகள்


வாஸிலி ஆன்ட்ரீவிச் கூட அவனை அநேக தடவைகள் வேலையை விட்டுத் துரத்திவிட்டது உண்டு. ஆனாலும் அவனே மீண்டும் நிகிட்டாவை வேலைக்கு எடுத்துக் கொள்ளத் தயங்கியதுமில்லை. அவனுடைய நியாயமான போக்கு, பிராணிகளிடம் அவன் காட்டும் அன்பு, முக்கியமாக குறைந்த கூலி ஆகிய காரணங்களுக்காக வாஸிலி மதிப்பு அளித்தான். அவனைப் போன்ற ஆளுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய ‘வருஷத்துக்கு எண்பது ரூபிள்கள்’ என்கிற கணக்கின்படி வாஸிலி நிகிட்டாவுக்குப் பணம் தருவதில்லை. ஏறக்குறைய நாற்பது ரூபிள்கள் சில்லறை சில்லறையாகவும் பல தவணைகளிலும் கொடுத்தான். அதைக்கூட அநேகமாக அவன் ரொக்கமாய் கொடுப்பதில்லை. தனது கடையிலிருந்து சாமான்களாகக் கொடுத்தான். சாமான்களின் விலையை அவன் அதிகப்படுத்தி விடுவதும் வழக்கம்.

நிகிட்டாவின் மனைவி மார்த்தா, ஒரு காலத்தில் வலிவும் வனப்பும் பொருந்திய மங்கையாக இருந்தவள், தனது ஒரு மகனையும் இரண்டு பெண்களையும் வைத்துக் கொண்டு குடும்பத்தை நிர்வகித்து வந்தாள், நிகிட்டா வீட்டிலேயே தங்க வேண்டும் என்று அவள் வற்புறுத்துவதில்லை. அதற்கு முதலாவது காரணம், தட்டுமுட்டுச் சாமான்களைப் பழுது பார்த்து வந்த ஒருவனோடு அவள் கடந்த இருபது வருஷ காலமாக தொடர்பு வைத்திருந்தாள். வேறொரு ஊரிலிருந்து வந்த குடியானவனான அந்த நபர் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தான். இரண்டாவதாக, அவளுடைய கணவன் நல்ல நிலைமையில் இருக்கும்பொழுது அவள் அவனைத் தனது இஷ்டத்-