பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

107

அவன் இறங்கும் பொழுது பிடித்திருந்த சேணத்தைச் சுற்றித் திருகிவிட்டான்.

அவன் கீழே குதித்து விடவும், குதிரை முரண்டி அடித்து எழுந்து நின்றது. முன்நோக்கிப் பாய்ந்தது. ஒரு குதி குதித்தது. மற்றொருமுறை துள்ளிப் பாய்ந்தது. மீண்டும் கனைத்துக் கொண்டது. கம்பளித் துணி, வார்ப்பட்டை எல்லாம் பின்னால் இழுபட்டுத் தொடர அது ஓடியது. வாஸிலியைத் தன்னந் தனியனாய் பனி ஓட்டத்திலே தங்க விட்டு விட்டு அது மறைந்து போயிற்று.

குதிரையைத் தொடர்ந்து செல்ல அவன் பாடுபட்டான். ஆனால் பனி மிக ஆழமாகப் படிந்து கிடந்தது. அவனது கோட்டுகள் கனமாக இருந்தன. அதனால் அடி எடுத்து வைக்குந்தோறும் அவன் முழங்கால் அளவு பனியில் அமிழ நேர்ந்தது. இருபது எட்டுகளுக்கு மேற்கொண்டு அடி எடுத்து வைக்க முடியாமல் மூச்சுத் திணற அவன் நின்று விட்டான். ‘தோப்பு, மாடுகள், குத்தகை நிலம், கடை, மதுச்சாலை, தகரக் கூரை போட்ட களஞ்சியமும் வீடும், எனது வாரிசு’ என்று எண்ணினான் அவன்.

‘இவைகளை எல்லாம் நான் எப்படி விட்டுவிட முடியும்? இதன் அர்த்தம் என்ன? அது நடக்காது!’ இப்படி எண்ணங்கள் அவன் உள்ளத்திலே பளிச்சிட்டன. பிறகு, காற்றில் அலைபட்ட மரத் தொகுதியையும், அதை அவன் இரண்டு தடவை தாண்டிச் செல்ல நேர்ந்ததையும் எண்ணினான். பயம் அவனைக் கவ்விக் கொண்டது. ஆகவே அப்பொழுது அவனுக்கு நேர்ந்து கொண்டிருந்த அனுபவத்தின் நிஜத்தன்மையில் அவன் நம்பிக்கை கொள்ளவே இல்லை. 'இது