பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

5

துக்கு ஆட்டி வைத்த போதிலும், அவளுக்கு அவனிடம் பயமிருந்தது. அவன் குடித்துவிட்டால், தீயைக் கண்டு அஞ்சுவதுபோல அவனைக்கண்டு நடுங்குவாள் அவன். ஒருதடவை நிகிட்டா குடித்துவிட்டு வீட்டிலிருந்த போது, இதர சமயங்களில் அடங்கி ஒடுங்கிப் போகிற பழக்கத்துக்கு ஈடுகட்டத்தானோ என்னவோ, அவளுடைய பெட்டியை உடைத்து அவளது மிகச் சிறந்த ஆடைகளை எல்லாம் வெளியே எடுத்துப் போட்டான்; ஒரு கோடரியை எடுத்து அவளுடைய உள் அங்கிகளையும் நல்ல உடுப்புகளையும் தும்பு தும்பாகக் கொத்திக் குதறி நாசப்படுத்தி விட்டான்.

நிகிட்டா சம்பாதித்த கூலி பூராவும் அவனுடைய மனைவியிடமே போய்விடும். அதுபற்றி அவன் எவ்வித ஆட்சேபமும் கிளப்பியதில்லை. அதனால், பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மார்த்தா இரண்டு தடவைகள் வாஸிலி ஆன்ட்ரீவிச்சை பார்க்கப்போனாள். அவனிடமிருந்து கோதுமை மாவு, தேயிலை, சர்க்கரை, கொஞ்சம் வோட்கா (மது) ஆகியவை பெற்றுக்கொண்டாள். அவ்வளவுக்கும் மூன்று ரூபிள்கள் ஆயின. மேற்கொண்டு ரொக்கமாக ஐந்து ரூபிள்கள் வாங்கினாள். அதற்காக அவள் அவனுக்கு மிகுந்த நன்றி தெரிவித்தாள். அவன் குறைந்த பட்சம் இருபது ரூபிள்கள் நிகிட்டாவுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது என்றாலும் அவன் அவளுக்கு சலுகையோடு விசேஷமான ஆதரவு காட்டிவிட்டது போல் தான் அவள் வந்தனம் அறிவித்தாள்.

‘நாம் உன்னோடு எப்பொழுதாவது ஒப்பந்தம் எழுதிக் கொண்டோமா என்ன? உனக்கு ஏதாவது தேவைப்பட்டால், தாராளமாக எடுத்துக்கொள்,