பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

119


‘நிக்கலீவ்னா, இன்னும் அவர் வரவில்லையா?’ என்று அவன் தன் மனைவியிடம் கேட்டான். ‘இல்லை, வரவில்லை’ என்று அவள் சொன்னாள். வீட்டு முன் வாசல்படியருகே யாரோ வண்டியில் வந்து நின்றது போல் சத்தம் கேட்டது. ‘அது அவராகத்தான் இருக்க வேண்டும்.’ ‘இல்லை, அவர் கடந்து போய்விட்டார்.’ ‘நிக்கலீவ்னா! ஏய், நிக்கலீவ்னா! அவர் இன்னும் இங்கே வந்து சேரவில்லையா?’ ‘இல்லை.’ அவன் இன்னும் தனது படுக்கையில்தான் கிடந்தான். எழுந்திருக்க முடியவில்லை. என்றாலும் ஓயாது காத்துக் கொண்டிருந்தான். இவ்வாறு காத்துக் கிடப்பது இயற்கைக்கு விரோதமான ஏதோ ஒரு விசித்திரமாகத் தோன்றிய போதிலும் ஆனந்தமாகத் தான் இருந்தது. திடீரென்று அவனுடைய ஆனந்தம் பூர்த்தியாயிற்று. அவன் யாரை எதிர்பார்த்துக் காத்திருந்தானோ அந்த நபர் வந்து விட்டார். வந்தது போலீஸ் அதிகாரி ஐவான் மேட்வீயிச் அல்ல. வேறொருவர். எனினும், அவருக்காகத்தான் அவன் காத்துக் கிடந்தான். அவர் வந்தார், அவனை அழைத்தார். அவனைக் கூப்பிட்டு, நிகிட்டாவின்மீது கிடந்து உஷ்ணப்படுத்துமாறு சொன்னவர் அவர்தான். தன்னைத் தேடி அவரே வந்து விட்டதற்காக வாஸிலி ஆன்ட்ரீவிச் மிகுந்த சந்தோஷம் அடைந்தான்.

‘இதோ வருகிறேன்!’ என்று அவன் மகிழ்ச்சியோடு கத்தினான். அந்தக் கூவல் அவனை விழிக்க வைத்து விட்டது. ஆனாலும், தூங்க ஆரம்பித்தபோது இருந்த அதே ஆளாக அவன் விழித்தெழும்படி அது துணைபுரியவில்லை. அவன் எழுந்து உட்கார முயன்றான்; முடியவில்லை. தனது கையை அசைக்க முயற்-