பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

டால்ஸ்டாய் கதைகள்

திரும்பி வந்தான். ஓடையைக் கடந்தபோது பாலத்தைத் தவற விட்டுவிட்டான். வண்டி ஓடையில் சிக்கிக் கொண்டது. அதனால் அவன் வண்டிக்கு அடியிலே ஊர்ந்து சென்று, தனது முதுகை வளைத்து உயர்த்தி வண்டியைத் தூக்கி நகர்த்திவிட முயன்றான். ஆனால், அதிசயம்!, அந்த வண்டி நகர்வதாயில்லை. அது அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டது. அவன் அதைத் தூக்கவும் முடியவில்லை; அதற்குக் கீழேயிருந்து வெளிவர இயலவுமில்லை. அவன் இடுப்பு முழுவதையும் அது நசுக்கத் தொடங்கியது. மேலும் எத்தகைய குளிர் அடித்தது! அவன் வெளியேறத்தான் வேண்டும், ‘விட்டு விடு!’ என்று கத்தினான் அவன். தன்மீது வண்டியை அழுத்திக் கொண்டிருந்த எவரிடமோ பேசுவதுபோல, ‘சாக்குகளை அப்புறப்படுத்து’ என்றான். ஆனால் வண்டியோ மேலும் மேலும் குளிர் அடைந்து அவனை அழுத்தியது. அதன் பிறகு, யாரோ விசித்திரமாகத் தட்டுகிற ஒலியை அவன் கேட்டான். நன்றாக விழித்து விட்டான்.

எல்லாம் அவனுக்கு நினைவு வந்தன. தன் மீது படுத்து உறைந்துபோய் உயிரிழந்து கிடந்த எஜமான் தான் குளிர்ந்த வண்டி. முக்கார்ட்டி தான் தட்டுகிற ஓசையை எழுப்பியது. அந்தக் குதிரை இரண்டு தடவை தனது குளம்பினால் வண்டியைத் தட்டியது.

‘ஆன்ட்ரீவிச்! ஏ ஆன்ட்ரீவிச்!’ என்று நிகிட்டா கூப்பிட்டான். உண்மையை அவன் உணரத் தொடங்கியிருந்ததால், தனது முதுகை நேர்படுத்திக்கொண்டு, எச்சரிக்கையோடு குரல் கொடுத்தான் அவன். ஆனால் வாஸிலி பதில் பேசவில்லை. அவனது வயிறும் கால்-