பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றமும் தண்டனையும்

141

 சிறையில் செருப்பு தைக்கும் தொழிலைக் கற்றுத்தேர்ந்தான் அக்ஸனோவ். அதன்மூலம் அவனுக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தது. அதைக்கொண்டு அவன் ‘ஞானிகளின் வாழ்க்கை’ என்ற புத்தகத்தை வாங்கினான். சிறையினுள் வெளிச்சம் நிலவுகிற வரையில் அவன் அந்த நூலைப் படிப்பான். ஞாயிற்றுக்கிழமைகளில், சிறையில் உள்ள மாதா கோயிலில் பிரார்த்தனை நேரத்தின்போது, புதிய ஏற்பாட்டில் உள்ள திருமுகத்தை அவன்தான் வாசிப்பான். தேவகீதம் பாடுவதிலும் அவன் கலந்து கொள்வான். அவனுடைய குரல் மட்டும் இன்னும் நன்றாகவே இருந்தது.

அவனது சாந்த குணத்திற்காக அக்ஸனோவை சிறை அதிகாரிகள் பெரிதும் விரும்பினார்கள் அவனுடன் வசித்த இதர கைதிகள் அவனிடம் மரியாதை காட்டினார்கள். அவர்கள் அவனை ‘தாத்தா’ என்றும் ‘ஞானி’ என்றும் அழைத்து வந்தனர், எதையாவது குறித்துச் சிறை அதிகாரிகளுக்கு மனுச் செய்து கொள்ள நேர்ந்தால், அவர்கள் அக்ஸனோவையே தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். கைதிகளுக்குள் ஏதாவது தகராறு ஏற்பட்டுவிட்டால், விஷயத்தை விசாரித்து விவகாரத்தைத் தீர்த்து ஒழுங்கு படுத்துவதற்காக அவர்கள் அவனையே நாடினார்கள்.

அக்ஸனோவின் வீட்டிலிருந்து எவ்விதத்தகவலும் எட்டவில்லை. அவனது மனைவியும் மக்களும் உயிரோடு இருந்தார்களா, இறந்து போனார்களா எனும் விஷயமே அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது.

ஒருநாள், அந்த ஜெயிலுக்கு புதிதாகக் கைதிகளின் கூட்டம் ஒன்று வந்து சேர்ந்தது. மாலை-