பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

11

முற்றத்தில் பனிமூடி உறைந்து கிடந்த உரக்கிடங்கின் மேலாகவே வண்டியைச் செலுத்தினான். அமைதியின்றித் துடித்து நின்ற குதிரையை வாசலை நோக்கி ஓட்டினான்.

‘நிகிட்டா மாமா !....... மாமா, மாமா!’ என்று ஒரு குரல் ஓங்கி எழுந்தது. ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் வீட்டினுள்ளிருந்து முற்றத்துக்கு ஓடிவந்தான். கறுப்பு நிற ஆட்டுத்தோலால் ஆன கோட்டும் வெள்ளைநிறத்தோல் பூட்சும், கதகதப்பான குல்லாயும் அணிந்திருந்தான் அவன். அவசரம் அவசரமாக ஓடிவந்த அச் சிறுவன் ‘என்னையும் உன்கூட அழைத்து போ’ என்று சொல்லிக் கொண்டே, மேல் சட்டையின் பொத்தான்களை மாட்டி நின்றான்.

‘அதுக்கென்ன, ஓடிவா கண்ணே!’ என்று கூறி, திகிட்டா வண்டியை நிறுத்தி அவனை எடுத்துத் தன்னுடன் அமர்த்திக் கொண்டான். மெலிந்து, உடல் வெளுத்துக் காணப்பட்ட சின்னப் பையன் முதலாளியின் மகன் ஆவன். வண்டியில் ஏறியதும் அவனுக்கு ஆனந்தம் பொங்கியது. வண்டி ரஸ்தாவை நோக்கி விரைந்தது.

அப்பொழுது இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. காற்றும் குளிரும் கலந்து நிலவிய உற்சாகமற்ற நாள் அது. உறைபனி நிலைமை கடுமையாக இருந்தது. கவிந்து வந்த கார்மேகம் வானத்தில் அரை வாசியை மூடி மறைத்து விட்டது. முற்றத்தில் அமைதி தான் நீடித்தது. ஆனால் வீதியிலே காற்றின் தாக்குதல் வலிமை பெற்றிருந்தது. அருகிலிருந்த கூரை ஒன்றிலிருந்து கீழே சரிந்து விழுந்த உறை-