இரண்டு பேர்
31
அறுப்புக்களம் ஒன்றைச் சுற்றிலும் உள்ள வாறுகால் ஓரமாக அம் மரங்கள் நடப்பட்டிருந்தன என்று தெரிந்தது.
காற்றிலே துயர ஒலி முனங்கி நின்ற வில்லோ மரங்களுக்கு அருகாமையில் வந்த உடனே குதிரை, சறுக்கு வண்டியைவிட உயர்ந்த மேட்டில் தனது முன்கால்களை அழுத்தமாக ஊன்றிக் கொண்டு பின்கால்களை உயர்த்தி இழுத்தது. அதன் மூலம் வண்டி உயரமான பரப்பைச் சேர்ந்தது. பிறகு குதிரை இடப்புறம் திரும்பி நடந்தது. அப்புறம் அதன் கால்கள் முழங்கால் அளவு பனியில் இறங்கி விடவில்லை.
அவர்கள் திரும்பவும் ஒரு ரஸ்தாவுக்கு வந்து விட்டார்கள்.
‘ஆகா. இதோ நாம் வந்து விட்டோம். ஆனால் எங்கே இருக்கிறோம் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!’ என்றான் நிகிட்டா.
ஓடும் பனியினூடே, ரோடு வழியாகவே, குதிரை முன்னேறிச் சென்றது. அவர்கள் மேலும் நூறுகஜ தூரம் போவதற்குள்ளாகவே களஞ்சியம் ஒன்றின் சுவர்—மரக்கிளைகள், குச்சிகளால் ஆனது—கறுப்பாக எழுந்து நின்றது கண்முன்னாலே. அதன் கூரை முழுவதும் பனியினால் கனமாக மூடப்பட்டிருந்தது. அதிலிருந்து பனி வழுகிக் கீழே விழுந்து கொண்டேயிருந்தது. அந்தக் களஞ்சியத்தைக் கடந்ததும் ரோடு காற்று வீசிய திசை நோக்கித் திரும்பியது. ஆகவே அவர்கள் பனிஓட்டம் ஒன்றினுள் புகுந்து செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது.