பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

37

யும், கால்களால் தடவிப் பாதையை அறிந்தும் நடந்தது அது. ஆகையினால், பனி கனமாகப் பெய்து காற்று வலுவாக அடித்த போதிலும், அவர்கள் அடையாள முளைக் கம்புகளை ஒரு தடவை தங்களுக்கு இடது பக்கத்திலும், அடுத்தாற்போல் வலது புறத்திலும் மாறி மாறித் தொடர்ச்சியாகக் காணமுடிந்தது.

இப்படி அவர்கள் பத்து நிமிஷ நேரம் பிரயாணம் செய்திருப்பார்கள். சாய்வான திரைபோல் மறைத்துக் கிடந்த பனிப் படலத்தின் ஊடாகத் திடீரென்று கறுப்பாக ஏதோ புலப்பட்டது. அது குதிரைக்கு முன்னால் ஊர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது.

அவர்களைப் போன்ற பிரயாணிகள் இருந்த மற்றுமொரு சறுக்கு வண்டிதான் அதுவும் என்பது தெளிவாயிற்று. குதிரை அவர்களைக் கடந்து போக முயன்றது. முன்னாலிருந்த வண்டியின் பின்பக்கத்தில் தனது குளம்புகளால் அறைந்தது அது.

‘போங்க போங்க!....யார் அங்கே ?... முன்னால் போங்க!’—அவ் வண்டியிலிருந்து குரல்கள் கூவின.

அந்த வண்டியைக் கடந்து செல்வதற்காக வாஸிலி குதிரையை விலக்கி ஓட்டினான். அதில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தார்கள். எங்கோ விருந்துக்குப் போய்விட்டு வீடு திரும்புகிறவர்கள் என்பது நன்றாகப் புரிந்தது. அவர்களில் ஒரு குடியானவன், சின்னக் குதிரையின் பனி மூடிய பின் பக்கத்தை நீண்ட சவுக்கினால் அடித்து ஓசை எழுப்பிக் கொண்டே இருந்தான். வண்டியின் முன்னாலிருந்த மற்ற இரண்டு பேரும் தங்கள் கைகளை ஆட்டி ஆட்டி ஏதோ கூச்சலிட்டார்கள். நன்றாகப் போர்த்து மூடப்-