பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

டால்ஸ்டாய் கதைகள்

மானக் குதிரையின் அறிவாற்றல் மீது அவனுக்குப் பெரும் மகிழ்வு உண்டாயிற்று. உண்மையில் அந்தக் குதிரை நுண்ணறிவு உடையது தான். அது முதலில் ஒரு காதைத் திருப்பியது. பிறகு மறுகாதைத் திருப்பியது. முதலில் ஒரு திக்கிலும், பிறகு வேறொரு பக்கமும் திருப்பியது. உடனே வளையமிட்டுத் திரும்பத் தொடங்கியது அது.

இதனால் செய்ய முடியாத ஒரே காரியம், பேசுவதுதான். அது என்ன செய்கிறது என்று பாரேன். போ, போ, உனக்குத் தான் நன்றாகத் தெரியும். அப்படித்தான், அப்படித்தான்!' என்று அவன் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

இப்போது காற்று பின்னாலிருந்து அடித்தது. கொஞ்சம் வெதுவெதுப்பாகவும் இருந்தது.

‘ஆமாம். இது புத்திசாலி தான்’ என்று நிகிட்டா குதிரையை வியந்து பேசுவதைத் தொடர்ந்தான்: ‘கிர்கிஷ் குதிரை வலிமை அதிகம் உள்ளது. ஆனால் முட்டாள்தனமானது. ஆனால் இந்தக் குதிரை – அது காதுகளினாலே என்ன வேலை பண்ணுகிறது பாருங்களேன்! அதுக்கு தந்தி எதுவுமே தேவை யில்லை. ஒரு மைலுக்கு அப்பால் உள்ளதையும் உணர்ந்து விடும்.’

மேலும் அரைமணி நேரம் கழிவதற்குள்ளாகவே அவர்கள் தங்களுக்கு எதிரே ஏதோ—காடோ, கிராமோ—கறுப்பாகத் தென்படுவதைக் காண முடிந்தது. முளைகள் மறுபடியும் வலது பக்கத்தில் தலை காட்டின. ஆகவே, அவர்கள் ரஸ்தா மீது வந்து சேர்ந்துவிட்டார்கள் என்பது நிச்சயமாயிற்று.