இரண்டு பேர்
53
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/Rule_Segment_-_Wave_-_40px.svg/40px-Rule_Segment_-_Wave_-_40px.svg.png)

![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Rule_Segment_-_Wave_-_18px.svg/18px-Rule_Segment_-_Wave_-_18px.svg.png)
யால் ஸமோவாரின் மூடியை வேகமாகத் தள்ளி விட்டாள். அது இப்பொழுது மிக அதிகமாகக் கொதித்துக் கொண்டிருந்தது. அவள் பிரயாசையோடு அதை மேஜையின் பக்கம் எடுத்துச் சென்றான். உயரத் தூக்கி 'தட்' என்று ஓசை எழும்படி அதை மேஜைமேல் வைத்தாள்.
இந்த நேரத்தில், வாஸிலி ஆன்ட்ரீவிச் தான் பாதையை எப்படித் தவற விட்டு விட்டான் என்பது பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். இதே கிராமத்துக்கு அவர்கள் இரண்டு தடவைகள் வர நேர்ந்ததையும் வழி விலகித் திரிந்ததையும், குடிகாரக் குடியானவர்கள் சிலரைச் சந்தித்ததையும் சொன்னான். அங்கே இருந்தவர்கள் அதிசயித்தார்கள்; அவர்கள் பாதையை விட்டு எங்கே எப்படி விலகியிருக்க வேண்டும் என்று விளக்கினார்கள்; வழியில் சந்தித்த குடிகாரர்கள் யார் என்று சொன்னார்கள்; பிறகு எப்படிப்போக வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.
‘இங்கிருந்து மோல்ஷனோவ்கா போகிற வழியை ஒரு சின்னக் குழந்தை கூடக் கண்டுபிடித்து விடும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பெரிய ரஸ்தாவிலிருந்து வலது பக்கம் திரும்புகிற வழியோடு செல்வது தான். அந்த இடத்தில் ஒரு புதர் கூட உண்டு. ஆனால் நீங்கள் அவ்வளவு தூரம் போகவே இல்லையே!’ என்று அண்டை வீட்டு ஆசாமி சொன்னான்.
‘இரவு பூராவும் இங்கேயே தங்கி விடுவதுதான் நல்லது. பெண்கள் உங்களுக்காக படுக்கை தயாரிப்பார்கள்’ என்று கிழவி வற்புறுத்தினாள்.
தனது மனைவியின் பேச்சை உறுதிப்படுத்தி அந்த வயோதிகனும் பேசினான். ‘நீங்கள் விடியற்-