இரண்டு பேர்
61
மாக நடப்பதற்கில்லை. தொழில் விவகாரம்! மேலும், நாம் புறப்பட்டாயிற்று. வீட்டாரின் குதிரையும் தயாராகிவிட்டது. கடவுள் கிருபை இருந்தால் நாம் அங்கே போய்ச் சேர்ந்து விடலாம்’ என்று வாஸிலி நினைத்தான்.
அவர்கள் அந்நேரத்தில் புறப்படக் கூடாது என்றுதான் வயோதிக வீட்டுக்காரனும் எண்ணினான். ஆனால் அவர்களை அங்கே தங்கும்படி முன்பே அவன் வற்புறுத்திப் பார்த்துவிட்டான். அவன் பேச்சு எடுபடவில்லை.
‘இவர்களிடம் திரும்பவும் சொல்வதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. ஒரு வேளை எனது வயது தான் என்னை கோழையாக மாற்றுகிறதோ என்னவோ. அவர்கள் அந்த இடத்துக்குப் போய்விடுவார்கள். எது எப்படியானால் என்ன? வீண் பரபரப்பு எதுவும் இல்லாமல் நாம் காலாகாலத்தில் படுத்துத் தூங்க முடியுமே’ என்று அவன் எண்ணினான்.
பெட்ரூஷ்கா ஆபத்து பற்றி யோசிக்கவே இல்லை. ரஸ்தாவையும், அந்த வட்டாரம் பூராவையும் அவன் நன்றாக அறிந்து வைத்திருந்தான். மேலும், ‘பனிச் சுழல் சூறையாய் சாடும்’ என்று வர்ணித்த வரிகள் வெளியுலக நிகழ்ச்சிக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தன. அதனால் அவனுக்கு ஏகப்பட்ட உற்சாகம்தான்.
போகவேண்டும் என்று நிகிட்டா கொஞ்சம் கூட ஆசைப்படவில்லை. ஆனாலும் தனது போக்கின்படி செயல்புரிய இயலாது, பிறர் இஷ்டத்துக்குப் பணிந்து போகும் தன்மையில் அவன் வெகுகாலமாகப் பழக்கப்பட்டு விட்டான்.