பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

டால்ஸ்டாய் கதைகள்


‘அதோ ஒரு கவிஞர் போகிறார் !’ என்று முனங்கிய வாஸிலி, லகானை இழுத்தான்.

‘ஆமாம். அருமையான பையன். உண்மையான குடியானவன்’ என்று நிகிட்டா சொன்னான்.

அவர்கள் முன்னேறிச் சென்றார்கள்.

நிகிட்டா, மேல் சட்டையை இழுத்து உடம்பைச் சுற்றிலும் இறுக்கிப் பிடித்து, தலையை தோள்களுக்குள்ளே குறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனது குறுகியதாடி கொண்டையை மூடி மறைத்தது. அவன் மௌனமாக இருந்தான். வீட்டில் தேநீர் பருகியதன் மூலம் பெற்ற உஷ்ணத்தை இழந்து விடாமலிருக்க முயன்றான் அவன். வண்டியின் நேரான சட்டங்கள் அவன் பார்வையில் பட்டுக்கொண்டிருந்தன. அதனால், நன்கு பண்பட்ட நேர்பாதையில் போய்க்கொண்டிருப்பதாக ஒரு பிரமை அவலுக்கு அடிக்கடி தோன்றியது. குதிரையின் ஆடி அசையும் பின்பகுதியும், ஓர்புறமாக ஒதுங்கித் தொங்கும் முடி போடப்பட்ட வாலும் அவன் கவனத்தில் உறுத்திக்கொண்டிருந்தன. முன்னால் கொஞ்சம் தள்ளி வண்டிச் சட்டம் உயர்ந்திருந்ததும், அதனூடே ஆடும் குதிரைத் தலையும், கழுத்தும், நெளியும் பிடரி பயிரும் பார்வையிலிருந்து மறையாது தோன்றின. பாதை ஓரத்து அடையாள முளை அவ்வப்போது அவன் பார்வையைக் கவர்ந்தது. ஆகவே ரஸ்தாமீது தான் செல்கிறோம்; கவலைப்படுவதற்கு எதுவுமில்லை என்றே கருதியிருந்தான் அவன்.

ரஸ்தாவைத் தவற விடாமல் போகும் பொறுப்பைக் குதிரையிடம் விட்டுவிட்டு, வாஸிலி வண்டி