இரண்டு பேர்
71
கணவாய்களே தென்படுகின்றன. நாம் மறுபடியும் காற்றை எதிர்த்துப் போகவேண்டியது தான்.’
எனவே அவர்கள் மீண்டும் கிளம்பினார்கள். மீண்டும் நிகிட்டடா பனியினூடே தட்டுத்தடுமாறி நடந்தான்; மறுபடியும் உள்ளே விழுந்தான்; திரும்பவும் ஏறி வந்தான்; மறுபடி அங்குமிங்குமாக அலைந்தான். கடைசியில், ஓய்ந்து போய் திரும்பி வந்து வண்டியின் அருகே உட்கார்ந்து விட்டான்.
‘சரி, இனிமேலே?’ என்று கேட்டான் வாஸிலி.
‘நான் மிகவும் ஓய்ந்து போனேன். குதிரையும் இனி நடக்காது.’
‘அப்படியானால் என்ன செய்வது?’
‘கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள்.’
நிகிட்டா மறுபடியும் எழுந்து சென்றான், ஆனால் சீக்கிரமே திரும்பி வந்தான்.
‘என் பின்னாலேயே வாருங்கள்!’ என்று சொல்லி, அவன் குதிரைக்கு முன்னால் சென்றான்.
வாஸிலி ஆன்ட்ரீவிச் இப்பொழுதெல்லாம் உத்திரவுகள் இட விரும்பவில்லை. அதற்கு மாறாக நிகிட்டா சொல்லியவாறே செயல்புரிந்தான்.
‘இங்கே, இப்படி வாருங்கள்’ என்று நிகிட்டா சத்தம் போட்டான். வேகமாக வலது பக்கம் அடி எடுத்து வைத்து அவன் கடிவாளத்தைப் பற்றிக் கொண்டு முக்கார்ட்டியை பனி ஓட்டம் ஒன்றை நோக்கி இழுத்துச் சென்றான்.
முதலில் குதிரை பின்வாங்கியது. அப்புறம், பனி ஓடையைத் தாண்டி விடலாம் என்ற நம்பிக்கையோடு