80
டால்ஸ்டாய் கதைகள்
கோட்டை நன்றாகச் சுற்றி இறுக்கி, சாக்குத் துணியால் தன்னை மூடிக்கொண்டான். தொப்பியை நன்றாக இறக்கி இழுத்து விட்ட பிறகு, அவன் விரித்து வைத்த வைக்கோல் மீது உட்கார்ந்து, காற்றையும் பனியையும் தடுத்துத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வண்டியின் பின் பக்கத்து மரப்பகுதியிலே சாய்ந்து கொண்டான்.
நிகிட்டா செய்கிற காரியங்களை ஏற்றுக் கொள்ளாத முறையிலே தன் தலையை ஆட்டிக் கொண்டான் வாஸிலி ஆன்ட்ரீவிச். பொதுவாகவே குடியானவர்களின் முட்டாள் தனத்தையும் கல்வி அறிவின்மையும் அங்கீகரிக்காதவனைப்போல அவன் தலையசைத்தான். ஆயினும் தான் இரவுப் பொழுதை வசதியாகக் கழிப்பதற்குத் தேவையானவற்றைச் செய்வதில் அவன் முனைந்தான்.
மீதமிருந்த வைக்கோலை வண்டியின் அடிப்பரப்பில் பதமாக விரித்து, தனக்குக் கீழே அதிகமாக வரும்படி கவனித்துக் கொண்டான் அவன். அப்புறம் சட்டையின் கைகளுக்குள்ளே தன் கரங்களைத் திணித்துக் கொண்டு, வண்டியின் மூலையில் தனது தலையை வைத்து முன்பக்கமிருந்து காற்று வராதவாறு தடுத்தபடி சௌகரியமாகப் படுத்து விட்டான்.
அவன் தூங்க விரும்பவில்லை. படுத்தபடியே சிந்திக்கலானான். தனது வாழ்வின் தனிப்பெரும் குறிக்கோளாய், அர்த்தமாய், ஆனந்தமாய், மாண்பாக எல்லாம் திகழ்ந்த அந்த ஒரே ஒரு பொருளைப் பற்றித் தான் அவன் சிந்தித்தான். அதுவரை அவன் எவ்வளவு பணம் சேர்த்திருந்தார்; இன்னம் எவ்வளவு