இரண்டு பேர்
83
பகுதியில் பட்டுத் தெறித்த பனியின் ஓசையும் தான் ஓயாது கேட்டன. அவன் திரும்பவும் தன் காதுகளை மூடிக் கொண்டான்.
‘இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் நான் ராத்திரி வேளைக்கு அங்கே தங்கியிருந்து விட்டே வந்திருப்பேன். உம், பரவாயில்லை. அங்கு நாளை போய்ச் சேர்ந்து விடலாம். ஒரே ஒரு நாள் தான் வீணாகி விட்டது. இத்தகைய குளிர் காலத்தில் மற்றவர்கள் பிரயாணம் செய்யத் துணிய மாட்டார்கள்.’ ஒன்பதாம் தேதி அன்று கசாப்புக் கடைக்காரனிடமிருந்து எருதுகளுக்காகப் பணம் வசூலிக்க வேண்டும் என்பது அப்பொழுது அவன் நினைவில் எழுந்தது. ‘அவனே வருவதாகச் சொல்லியிருந்தான். ஆனால் அவன் என்னை வீட்டில் காண முடியாது. பணத்தை எப்படி வரப்பற்றுவது என்கிற விஷயம் என் மனைவிக்குத் தெரியாது. எந்த விஷயத்தையும் சரிவரச் செய்யத் தெரியாது அவளுக்கு’ என்று எண்ணிக்கொண்டான் அவன். முந்திய தினம் நடைபெற்ற விருந்தில் அதிதியாகக் கலந்து கொண்ட போலீஸ் ஆபீஸரை எப்படி உபசரிக்க வேண்டும் என்று தெரியாமல் அவள் திண்டாடியது அவனுக்கு நினைவு வந்தது. ' ஆமாம், அவள் பெண்பிள்ளை தானே! அவள் எதை எங்கே பார்த்திருக்கப் போகிறாள்? என் தகப்பனார் காலத்தில் எங்கள் வீடுதான் எப்படி இருந்தது? சாதாரணமாய் ஒரு பணக்காரக் குடியானவன் வீடாகத் தானே? ஒரு மாவுமில், ஒரு விடுதி—இருந்த சொத்து முழுவதும் இவ்வளவுதான். ஆனால் இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் நான் செய்து முடித்திருப்பது என்ன? ஒரு கடை,