92
டால்ஸ்டாய் கதைகள்
தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் விருப்பமும் இருந்தது அவனுக்கு. அவன் தனது மேல் அங்கியின் பிணைப்பை நிதானத்தோடு தளர்த்தி, உள்ளே கையை நுழைத்து, உன் சட்டைக்குள் திணிப்பதற்கு முந்தி வெகு நேரம் தடவித் திண்டாடினான். மிகுந்த சிரமத்துக்குப் பிறகு அவன் தனது வெள்ளிக் கடியாரத்தை வெளியே இழுத்தான். எனாமல் பூசி, பூ வேலைகள் செய்யப்பட்டிருந்த அக் கடியாரத்தினால் மணியை அறிந்து கொள்ள முயன்றான் அவன். வெளிச்சம் இல்லாமல் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை.
ஆகவே, சிகரெட்டைப் பற்ற வைப்பதற்கு முயற்சித்த போது செய்தது போலவே, அவன் மறுபடியும் முட்டு மண்டியிட்டு முன்கைகளை ஊன்றிக் கொண்டு, தீக்குச்சிகளை வெளியே எடுத்து ஒரு குச்சியைக் கிழிக்க முனைந்தான். இந்தத் தடவை அவன் சர்வ ஜாக்கிரதையோடு முயற்சி செய்தான். தீக்குச்சிகள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய தலையும் அதிகப்படியான பாஸ்பரஸ் மருந்தும் பெற்றிருந்த குச்சியாகத் தேடிப் பிடித்து ஒன்றை எடுத்து முதல் தடவையிலேயே கொளுத்தி விட்டான். கடியாரத்தின் முகப்பை வெளிச்சத்தின் அருகே கொண்டு வந்து பார்த்த போது அவனால் அவன் கண்களை நம்பவே முடியவில்லை..... அப்பொழுது மணி பன்னிரண்டு ஆகிப் பத்து நிமிஷங்களே கழிந்திருந்தன. இன்னும் இரவு முழுமையும் அவன் முன்னால் காத்து நின்றது.
‘ஓ, எவ்வளவு நெடிய இரவு!’ என்று எண்ணினான் அவன். குளிரின் சிலிர்ப்பு தனது முதுகின் மேல் ஊர்வதை உணர்ந்ததும், ரோமச் சட்டைகளை இழுத்து மாட்டி மேலும் நன்றாகப் போர்த்திக் கொண்டு,