பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

97


மார்புடைக் கருந்தலை யெற்குறித் தனனே, யானும், - கடிகமழ் உவகைக் கைவல் காட்சியென் துடியவற் கவனரை யறுவை யீந்தனனே. அதனால், என்னெறிந்து பெயர்தல் அவர்க்குமாங் கரிதே. அவனெறிந்து பெயர்தல் எமக்குமாங் கரிதே. அதனால், -- என்ன தாகிலும் ஆக முந்நீர் நீர்கொள் பெருங்குளந் தயங்க நாளை நோய்பொதி நெஞ்சங் குளிர்ப்ப வவன்தாய் மூழ்குவள் ஒன்றோ? அன்றேல் என்யாய் மூழ்குவள் ஒன்றோ? அன்றியவன் தாயும் யாயும் உடன்மூழ் குபவே! (புறத் 1377) இங்ங்னம் இரு தலைவர்கள் தம்முள் ஒருவரையொருவர் அழித்தலைக் கருதினராய்க் கடும்போர் இடுதலும் அந்நாளைப் போர் மரபாக இருத்தல் வேண்டும். ஒத்த தகைமையுடைய இருவர் இவ்வாறு பகைவரது தகுதிப்பாட்டை மதித்துப் போற்றும் பண்பாட்டினையும் கொண்டிருந்தனர். -

38. பாணியிற் கொட்டும்! வீரன் ஒருவன் தன் குதிரைமேல் ஏறியமர்ந்தவனாகச் செருக்குடன் வந்து கொண்டிருக்கின்றான். குதிரையின் காற்குளம்புகளின் ஒலி தாளவமைதியுடன் கேட்கின்றது. இதனைக் கண்டு வியந்த சான்றோர் ஒருவர், அதன் சிறப்பை இப்படிப் பாடுகின்றனர்.

"அரசனுக்குரிய அரண்மனையிலே காலை முரசம் முழங்கும் போர்ப் பாசறையிலோ துடியனின் துடி முழக்கம் எழும். குற்றமின்றி நாள் புலர்ந்ததன் மகிழ்ச்சியை அறிவிக்க முழங்கும் துடியனின் துடிகொட்டும் முழக்கைப் போல, அந்தப் பாணியிலேயே ஒலித்துக் கொண்டிருந்தது. குதிரையின் குளம்படிகளின் ஒலியும், அதன்மேல் ஊர்ந்து வருகிற அவனும், கொல்லும் திறப்பாட்டிலே வலியுடையோன் ஆவான். அவன் மிகவும் சினத்துடனே பகைவரை அழிப்பது கருதி வந்து கொண்டிருக் கின்றான். அவனால் வெட்டப்படும் தலைகளை பருந்தினம் வயிறார உண்டு களிக்கும். வடித்த இலைத் தொழிலாற் சிறந்த வேலினை இருபாலும் வீசியவனாக, அவன் களத்திலே உலாவருகின்றான்.' - - -