பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

தகடூர் யாத்திரை


வாதுவல் வயிறே! வாதுவல் வயிறே! நோலா வதனகத் துன்னின் றனனே, பொருந்தா மன்னர் அருஞ்சம முருக்கி அக்களத் தொழிதல் செல்லாய்; மிக்க புகர்முகக் குஞ்சரம் எறிந்த வெஃகம் அதன்முகத் தொழிய நீபோந் தனையே; எம்மில் செய்யா அரும்பழி செய்த - கல்லாக் காளைநின் னின்ற வயிறே! )106 / - ويرسيليا(

‘கரியிடை வேலொழியப் போந்தற்குத் தாய் தபவந்த தலைப்பெயல் நிலை என்று இச் செய்யுளை, 'மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும் என்னும் சூத்திர உரையிற் காட்டிக் கூறுவர், தொல்காப்பிய உரையாசிரியரான நச்சினார்க்கினியர்.

48. அழுகையும் துடிமுழக்கும்!

இரவலர்களுக்கு ஒப்பற்ற புரவலனாக இருந்த அதிகமான் இறந்துவிட்டான். தன் நாட்டின் உரிமையினைக் காத்துநின்று களத்திலே வீழ்ந்து விட்டான். சேரன் போரினை வென்றான்; ஆனால் அதிகமானோ மக்களின் உள்ளங்களைத் தன்னுடைய மறைவினாலே வென்று விட்டான். அவனது வெற்றியின் சிறப்பு, அவனைக் கொன்று பெற்ற வெற்றியினால் மகிழ்ச்சி துள்ள வேண்டிய சேரமானின் உள்ளத்திலும், இழப்பின் வருத்தமாகவே

கவியத் தொடங்கியது என்பதனால், அளவிறந்த சிறப்பெய்தி

நிலை பெறுகின்றது.

அதிகமான் இறந்துவிட்டான். அவன் இறப்பினை அறிந்தபோதும் தகடுர் மறவர்களின் உள்ளங்கள் தளர்ந்து போய்விடவில்லை. தம் தலைவனை இழந்ததும் சோர்வுற்றுப் பின்னடைய வேண்டிய படையினர், பகைவரை எதிர்த்துச் சாவைத் தழுவவே ஒருவரின் ஒருவர் முந்துகின்றனர். துடிமுழக்கம் களத்திலே ஓய்ந்த பாடில்லை.

தகடூர் மறவரின் இந்தச் செயலை நோக்கும் சான்றோரின் உள்ளம் வேதனையாலும் வியப்பினாலும் ஒரு சேர வெதும்புகின்றது. "இரவலரே வருக வருக என இசைத்துக் கொண்டிருந்த துடியின் ஒலியை அதிகனின் தகடூர்க் கோட்டையிடத்தே கேட்டவர்கள் அவர்கள். அந்த ஒலியே மறுபடியும் கேட்கின்றது. ஆனால், அது இரவலரை வருகவென அழைக்கும்.ஒலியாக இல்லை. தகடுர்க் கோமான் அதிகன், புரவலனாக விளங்கிய இரவலர் புகலிடம், களத்திலே மாய்ந்து விட்டான்; அவன் பெற்ற வீர சுவர்க்கத்தைப் போற்றுமாறு முழங்குகின்றது துடிப்பறை, - -