பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

தகடூர் யாத்திரை


வெருவந்த தோற்றத்தால் உருவின. பலகூளிக் கணங்கள் குருதி மண்டைசுமந் தாடவும் பறையன்ன விழித்த கண்ணாள் பிறையன்ன பேரெயிற்றாள் குடைவன்ன பெருமுலையாள் இடைகரந்த பெருமோட்டாள் இடியன்ன பெருங்குரலாள் தடிவாயாள் தசைப்புறத்தாள் கடலன்ன பெருமேனியாள் காண்பின்னாக் கமழ்கோதையாள் சிலையன்ன புருவத்தாள் சென்றேந்திய வகலல்குலாள் மழையும் மஞ்சும் வளியும் போலுஞ் செலவினா ளொருபெண் டாட்டி தலைவிரித்துத் தடக்கை நாற்றி மறனெறிந்து மாறு கொண்டறியா அறிவுக்கிம் முறைநா ளிவ்வள வென்றே பூவிரல் காட்டி நீறுபொங் கத்தன் கைகளால் நிலனடித் துரை யிடஞ்செய்து காடு புகுதல் கண்டேன் என்னுங் கவலை நெஞ்சமோ டவலம் நீந்தினாள் அன்றது மன்றவ் வதிகமான் றாய்க்கு.

(தக்கயாகப் பரணி உரையில் உரையாசிரியர் காட்டும் தகடூர் யாத்திரைச் செய்யுள் இது இந்தச் செய்யுள், அதிகமானின் தாய் தன் மகனின் அழிவுக்கு முன்னால் இப்படி முன்னதாகவே அவனழிவைக் குறித்த ஒரு தீய கனவைக் கண்டனள் என்கின்றது. இதனால், அதிகமானின் தாயும் அந்தப் போர்க்காலத்தே உயிரோடிருந்தவள் என்று நாம் அறிகின்றோம். 'கவலை நெஞ்சமோடு அவலம் நீந்தினாள் என்ற சொற்கள் தாம் எத்துணை உருக்கமாக அந்த அம்மையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன!

46. நகுதலும் நகுமே! அதிகமானுடைய தகடூர்க் கோட்டைப் படைத்தளபதி களுள் ஒருவன் பெரும்பாக்கன் என்னும் பெயரினன்.

இவன் அதிகமானால் சிறப்பிக்கப் பெற்ற போர் மறவனும் ஆவான். இவனுடைய போராற்றலை மதியாது, சேரமான் தன்னுடைய முனைப்படையிலே வந்து நின்று போரிட முயல் கின்றான். அப்பொழுது அரிசில்கிழார், அவனை விலக்கு வாராகக் கூறுகின்றார். -