பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

41


என்றாலும், பரந்த கடலாற் சூழப்பெற்ற உலகிடத்து ஒழுக்கம் அனைத்தையும் முற்றவும் ஆராய்ந்தாலும், ஒன்று மட்டும் தெளிவாகும். அது இரந்துண்பாரை இழிவாகக் கருதாத ஒருவன் எவனுமில்லை’ என்பதுதான். இதனால் இரத்தல் மிகவும் இழிந்த தென்பது நன்கு உணரப்படும்.

நூற்றிவரிற் றோன்றும் தறுகண்ணர், ஆயிரவர் ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றமொன்று ஆற்றக் கொடுக்கு மகன்தோன்றுந் தேற்றப் பரப்புநீர் வையகந் தேரினும் இல்லை இரப்பாரை எள்ளா மகன். . (புறத்: 227)

. 'இரப்பாரை எள்ளாமகன் இல்லை எனக் கூறி ஈகையின் கடமை வலியுறுத்தப்பட்டது.

'நூற்றுவரில் தோன்றும் தறுகண்ணர்’ எனவே, அவரது பெருமை பசியது தன்மையும் கூறப்பட்டது. அத்தகையவர் ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றமொன்று ஆற்றக் கொடுக்கும் மகன் தோன்றும். எனவே அத்தகையானின் பெரிதான வள்ளன்மையும் கூறப்பட்டது. .

- சேரமானின் உணவுக் கொடையை வியந்து கூறியது இதுவென்று கொள்க. r -

அன்றி, அதிகனிடம், 'நீ பெருஞ்சேரலிடம் சென்று பணிந்து நின்று, நின் தகடுர் நாட்டை நினக்குத் திறையின்றித் தந்தருள இரந்து கேட்பின், அவன் உவப்புடன் நல்குவன்’ என்று

சொன்னவருக்கு, அவன் இரந்து நிற்றலின் இழிவை உரைத்து அதனை மறுத்தது எனவும் கொள்ளலாம்.

4. செங்கோன்மை

- தமிழகத்தில் மன்னரசு அந்நாளில் நிலவியது என்றாலும், அந்த அரசு இன்னின்னபடி நிலவுதல் வேண்டுமென்கின்ற விதிமுறைகளும் இருந்தன. அவ்விதிகளுக்கு ஏற்ப விளங்கிய அரசு செங்கோன்மை கொண்டதெனவும், மாறுபட்டது கொடுங்கோன்மை உடையதெனவும் சொல்லப்பட்டன.

அவற்றுள் செங்கோன்மைபற்றிய இரண்டு தகடூர் யாத்திரைச் செய்யுட்கள், புறத்திரட்டுள் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று இது. - -

சேரமான் தகடுர்ப் போருக்கு எழுகவென்று ஆணை பிறப்பித்து விட்டான். தகடூர் மன்னன் பெருவலிமையும்