பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

43


அறம் புரிந்தன் றம்ம அரசிற் பிறத்தல் துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் பாடு செயலியார் தத்தம் - பிறந்தவேல் வென்றிப் பொருட்டு. (ഗ്ഗക് : 6ി

"சான்றோரே! - - “தாங்கள் சொல்வது தங்களளவில் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், அரச குடியில் வந்து பிறத்தல் என்பது, முன் செய்த அறத்தின் பயனாக அமைவது என்பார்களே, அது உண்மையன்று.

விட்டுப்போகிய தொடர்புடைய பலரோடும் செறிந்த நட்புறவு மேற்கொள்வதற்கும் முடியவில்லை. சிறந்த தன்மையுடைய சான்றோர்க்குக் கொடுத்து உதவி செய்து விளங்குவதற்கும் இயலவில்லை.

"தங்கள் தங்கள் பிறந்த குடியின் புகழைக் கருதித் தத்தம் வேலாற்றலால் வென்றிபெறுவதன் பொருட்டாக மட்டுமே வேந்தர்களாகப் பிறந்துள்ளோம்" என்கின்றான் அவன்.

படையெழுச்சி என்பது அறத்தோடு பட்டதே ஆயினும், தன் குடியினனான அதிகனை அழிப்பதற்குச் செல்லுகின்ற போது, சேரலனின் உள்ளம் அதனை விரும்பாது வேதனைப்படுகின்றது. அறம் புரிந்தவர் உயர்நிலை உலகம் புகுவர் என்பதும், பிறவாப் பெருநிலை பெறுவர் என்பதும் சான்றோர் கூற்றுக்களாக, இப்படிப் பிறந்து வேலாற்றல் காட்டி வெற்றி பெறுவதன் பொருட்டாகச் செயலாற்றிக் கவலை யுறுகின்ற பிறப்போ அமைதல் வேண்டும், என்று கலங்கு கின்றான் அவன். இதனால், அரசப் பிறப்பு 'அறம்புரிந்ததன் பயன் அன்று முற் செய்த வினைப் பயனே காண்’ என்று கூறியும் துயருறுகின்றான். .

அதிகன் இவன் குடியினன். இருந்தும், தொடர்பு விட்டுப் போயதும், அவனை அழித்தற்குப் பொருந்திய புதுநட்பினரைக் கொண்டு மேற்செல்லுமாறு நேர்ந்த்தும், சேரமானை வாட்டுகின்றன. தன் மனைவி மக்கட்கும் மற்றும் சிறந்தாரான சான்றோர்கட்கும் செய்தற்குரிய கடமைகளைச் செய்யாது போர்மேற்கொண்டு போதலை அவன் உள்ளம் இனிதெனக் கொள்ளவில்லை.

தத்தம் படையாக வடித்துக்கொண்ட வேலினுக்கு வெற்றி தேடுவதன் பொருட்டாகச் சென்று, உறவினரையும் பிறரையும் அழித்தலை அவன் மனம் மிகவும் துயரத்தோடுதான் ஏற்கின்றது.