பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

தகடூர் யாத்திரை


வருதற்குத் தகடூரின் நிலையே ஊக்கமூட்டுவதாக இருந்தது என்பதை யேனும் அதிகமான் ஏற்கவில்லை. -

'பெருஞ்சேரல், தனது ஆதிக்க எல்லையைத் தன் படைப் பெருக்கின் காரணமாகப் பிறவரசுகளின் மேற்செலுத்திப் பரப்பவே எண்ணுகின்றான்' என்று கருதி அதற்குப் பணியாது எதிர்த்து நின்று, அதன்கண் அழிந்து படினும், அதுவே தன்னால் ஏற்கக்கூடியதென்று தன் உடன் பிறந்தானை எதிர்ப்பதற்காகக் களிற்றுப் படையைத் திரட்டிப் பொலிவோடும் தோன்றினான். அவனைக் கண்டு, - -

ஒளிவிடு பசும்பொன் ஓடை சூட்டிய வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே! வினவுதி யாயின் கேண்மதி, சினவா(து) ஒருகுடர்ப் படுதர ஒளிரை துற்றும் இருதலைப் புள்ளின் ஒருயிர் போல அழிதரு வெகுளி தாங்காய், வழிகெடக் கண்ணுறு பொழுதிற் கைபோல் எய்தி நூம்மோர்க்கு, . . நீதுணை யாகலும் உளையே; நோதக முன்னவை வருஉம் காலை நும்முன் நுமக்குத் துணையாகலும் உரியன்; அதனால் தொடங்க வுரிய வினைபெரி தாயினும் அடங்கல் வேண்டுமதி யத்தை; அடங்கான் துணையிலன் தமியன் என்னும் புணையிலன்; பேர்யாறு எதிர்நீந்தும் ஒருவன், அதனைத் தாழ்தல் அன்றோ அரிது! தலைப்படுதல், வேண்டிற், பொருந்திய வினையின் அடங்கல் வேண்டும்; - அனைய மாகீண் டறிந்திசி னோர்க்கே. (புறத் : 28) எனப் பொருண்மொழி புகன்றார்.

ஒளிவிடு வேந்தே என இனிதுற விளித்தார்; கேண்மதி எனத் தம்பால் ஈர்த்தார்; ஒரு குடர் போல உடன் பிறப்பை நயமாக மொழிந்தார். தும்மோர்க்கு நீ துணையாகாமலும் உளை, நும்முன் நுமக்குத் துணையாகலும் உரியன் என உடன்பிறந்தார் உரிமைக் கடப்பாட்டை ஒதினார். அடங்கான் அரிது என அவன் அடங்காதவனாகவும்; துணையில்லாதவனாகவும்; தனித் தோனாகவும் தக்க பாதுகாப்பற்றவனாகவும் இருப்பதைச் சிறிதும் மறையாமல் எடுத்துரைத்து, வெற்றி பெறலருமையைக் கூறினார். தொடங்கவுரிய வினை ப்ெரிதாயினும் அடங்கல் வேண்டும். வினையின் அடங்கல் வேண்டும் என அழிபாட்டுக்குக்