பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

69


தன் திட்டம் யாதென்பதனையும் அவனால் தெளிவுபடுத்த இயலவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஒரு புலவர் அதிகனின் தன்மை பாராட்டக் கூடியதன்று என்பதனை வெளிப்படை யாகவே கூறுகின்றனர். * ,

"கூற்றுவனை ஒப்பவனான பெருஞ்சேரல் இரும்பொற்ை யானவன், நின் கோட்டை வாயிலின்கண் வந்து முற்றியுள்ளான். நின்னை அழிப்பதையும் தன் முடியாகக் கொண்டுள்ளான்.

"இங்ங்ணம் செயலாற்றிய அவனைச் சென்று அடுதலே நீ செய்யவேண்டுவதான கடமையாகும். அங்ங்னம் அடுதற்கு நின்னால் இயலாது போகுமான்ால், அவன் போரினை எதிரேற்றுக் களத்திலே நீ சாதல் வேண்டும். இவ்விரண்டனுள் ஒன்றே நீ செய்ய வேண்டுவதும், நினக்குப் பெருமை தருவதும் ஆகும்.

"அங்ங்னம் சாவதற்கும் நீ விரும்பாயாகிக் கோட்டைக்கு உள்ளாக இருந்துவருவது நினக்குச் சான்றோரால் மதிக்கப்படும் சிறப்பைத் தருவதும் அன்று, நினக்குப் புகழ் தருவதும் அன்று. இதனை அறியாயாய் நீ கேட்டார்க்கு மாற்றம் மிகவும் தந்துகொண்டிருப்பது முறையாகுமோ? .

கூற்றுறழ் முன்பின் இறைதலை வைத்தபின் ஆற்றி யவனை அடுதல்; அடாக்காலை ஏற்றுக் களத்தே விளிதல்; விளியாக்கால் மாற்றம் அளவும் கொடுப்பரோ, சான்றோர்தம் தோற்றமும் தேசும் இழந்து! - (ഗ്ഗഴ് : ീ) இங்ங்னம் அறமுறைத்த சான்றோரது சொற்கள் அதிகனின் தமிழ் மாண்பையே சுட்டிப் பழிப்பதாக அமைந்துவிட, அவன் பெரிதுஞ் சினங்கொண்டு எழுகின்றான். சேரரது படைகளிற் புகுந்து, அவற்றை அழிக்கும் செயலையும் மேற்கொள்ளு கின்றான். . r .

20. தாமாகவும் போகும் உயிர்!

தகடூர் முற்றுகையின் முதற்கட்டம் தொடங்கிவிட்டது. பெருஞ்சேரல் இரும்பொறையின் படை மறவர்கள் தகடுர்க் கோட்டையைச் சூழவிருந்த காவற் காட்டினை அணுகி விடுகின்றனர். - - .

தேர்கள், யானைகள், குதிரைகள் இவற்றின் மேல் அமர்ந்தவராகப் படையாண்மைமிக்க தலைவர்கள் பலர் அணியணியாக வருகின்றனர். காவற்காட்டை நெருங்கும்