பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தகடூர் யாத்திரை


வரையும் பேராரவத்தோடு செருக்குடைய வீரமொழிகளை பேசியபடியே மேல்வந்த உழிஞை மறவர்கள், காவற்காட்டை அணுகவணுக, இனந் தெரிந்து கொள்ள முடியாத ஐயத்திற்கு உள்ளாகின்றனர். காடடர்ந்த அந்தக் காவற்காட்டை எவ்வித எதிர்ப்பு. மின்றித் தங்களைக் கைப்பற்றிக் கொள்வதற்கு தகடூர் மறவர்கள் விட்டுவிடுவார்கள் என்று அவர்கள் ஒரு போதுமே நினைக்க வில்லை. கடுமையான போரினை நிகழ்த்தித்தான் காவற் காட்டை அணுகவேண்டியதிருக்கும் என்று நினைத் திருந்தார்கள். ஆனால், எதிர்ப்பவர் எவரையும் காணாது போகவே அவர்கள் திகைப்புற்றனர். தகடுர் மறவர்களின் திட்டத்தை அறியவியலாதவராகப் பெரிதும் மனம் கலங்கினர். அந்த நேரத்தில், உழிஞைப் படையினர் காவற்காட்டை நெருங்கி விடுகின்றனர். திடுமெனத் தகடூர்க் குதிரை வீரர்கள் காட்டுக்குள்ளிருந்து கடுவேகமாகப் பாய்ந்துசேரப்படையினரை வெட்டி வீழ்த்துகின்றனர். அவர்களுடைய ஆவேசமான தாக்குதலாற் சேரரின் முன்னணிப்படை சிதறுகின்றது. பலர் வெட்டுண்டு வீழ்கின்றனர். இரத்த வெள்ளமும் குறையுடல் களும் எங்கணும் மலையெனக் குவிகின்றன. சாவைத் தழுவுவ தென்ற முடிவுடன் வந்து மோதுகின்ற நொச்சி வீரரான தகடூர் மறவர்களது வாளாற்றலுக்கு முன்னர்ச் சேரப்படையினர் நிலைகுலைந்து போகின்றனர். . காவற்காட்டுப் போரை முன்னின்று நடத்திய சேரத் தளபதியின் உள்ளம், தன் படையின் பேரழிவைக் கண்டதும் கொதிப்படைகின்றது. அவன் கண்கள் அனலைக் கக்குகின்றன. குதிரையை வேகமாகச் செலுத்தியவனாகக் கலைந்து ஒடும் தன் படைமறவர்களைத் தடுத்து நிறுத்த முனைகின்றான். "போரின் கடுமை மிகுதியாக இருக்கின்றது. முறையாகத் திட்டமிட்டும், ஒற்றரைக் கொண்டு ஒற்றியறிந்தும் அதன்பின்னரே தாக்குதலில் ஈடுபட்டிருத்தல் வேண்டும். இன்றேல், நம் முன்னணிப்படை முற்றவும் அழிந்து போகும். காட்டின் மறைவிலிருந்து நொச்சி மறவர்கள் வெளிவரு வதனால், அவர்களை முறையாக எதிர்த்து நிற்க நமக்கு வழியே இல்லை. ஆகவே, நம் படையின் அழிவைத் தடுக்க வேண்டு மானால்,இப்போது பின்வாங்கிப் போவதொன்றுதான் வழி” என்று தலைவனிடம் கூறுகின்றான் ஒருவன். அதனைக் கேட்டதும் தலைவனின் சீற்றம் மிகுதியாகின்றது. தன் மறவரைத் தடுத்துநின்று, அவன் கூறுகின்ற வீரவாசகம் இதுவாகும். - -