பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

75


கொடுத்துச் சிறந்தார்கள், மூத்தோர் என்னும் மதிப்பிற்கு உரியவர்கள் ஆகின்றனர். இப்படித் தான் வீரர்களை ஆன்றோர்கள் அளந்தறியக் கருதுவார்கள்.

இந்தத் தகைமையை எடுத்துச் சொல்லி, அவரால் உயர்த்துப் போற்றப்படுகின்ற நல்ல சிறப்பைத் தானும் அடையப்போவதாக ஆண்மை பேசுகின்றான் ஒருவன்.

அவனது இளமை மாறாத வடிவைக் கண்ட வீரருள் ஒருவன், அவன்பாற் சென்று, 'நீ மிக்க இளையவன், தம்பி! நீ போர்க்கு வருதல் வேண்டா” என்று கூறவும், அந்தச் சிறுவன், தன் ஆண்மை தோன்ற உரைப்பது பொருளாக அமைந்த செய்யுள் இது. - -

பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க்கு உடம்பு கொடுத்தாரே மூத்தார் - உடம்பொடு முற்றுழிக் கண்ணும் இளையரே தங்கோமாற்கு உற்றுழிக் காவா தவர்! - (புறத் :173)

பிறந்திருக்கும் அந்தப் பொழுதிலேயும், பெய்த தண்ணிய மலர்களையுடைய மாலையினை அணிந்த தம் மன்னவருக்குத் தம் உடம்பினைக் காணிக்கையாகக் கொடுத்தவர்களே, அறிவினான் மூத்தார் ஆவார்கள். " مع .

அன்றி உடம்பொடு முற்றியிருந்தும் மன்னர்க்கு ஒர் இடையூறு வந்தவிடத்து உதவாது அயர்ந்திருப்பவர் எவரோ அவரே இளமை உடையவர் ஆவார்கள்! - -

இங்ங்னம் ஆண்மை மிகுதி தோன்ற உரைத்துப் போர்கெழுந்த மறவர் இளைஞர்களைக் கொண்டிருந்தது தகடுர் நாடு. நாட்டுரிமைக்குப் போரிட முற்படும் அத்தகைய நல்லோரை உடையதாக இருந்தமையால் தான், இன்றும் நாம் அதன் புகழைப் போற்றுகின்றோம்! -

24.வேந்தன் நீ ஆயினாய்!

தகடூர்ப் போர்க்கண் இருதிரத்தும் வெற்றி தோல்வி காணும் பொருட்டாக, உழிஞையாராகச் சேரரும், நொச்சியாராகத் தகடூர் நாட்டாரும் திகழ்ந்தனர். ஆயினும், இரு திறத்தார்க்கும் படைத்துணையாக வந்து மற்றும் பற்பல குறுநில வேந்தர்களும் அமைந்திருந்தனர். அவர்களுள், தகடுரார்க்குத் துணையாக அமைந்திருந்த வேந்தன் ஒருவன் ஒரு சமயம், தன்னுடைய