பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

தகடூர் யாத்திரை


இகழ்தல் ஒம்புமின் புகழ்சான் மறவீர் கண்ணிமைப் பளவிற் கணைசெல் கடுவிசைப் பண்ணமைப் புரவிப் பண்புபா ராட்டி எல்லிடைப் படர்தந் தோனே, கல்லென வேந்துர் யானைக் கல்லது - ஏந்துவன் போலான்தன் இலங்கிலை வேலே!

- - (ഗ്ഗഴ് :/ീ0

"புகழ் மிகுந்த மறவர்களே! இகழ்தலைக் கைவிடுவீராக! கண் இமைப்பதன் அளவிற்குள் கணைபோலச் செல்லுகின்ற கடிய விரைவினைக் கொண்ட பண்ணுதல் அமைந்த தன் குதிரை யினது போர்மறத்தைப் பாராட்டியவனாகப் பகற்பொழுதில் போர்முனைக்கு வந்துள்ளான். இவன் ஆரவாரத்துடன் உங்கள் வேந்தன் ஊர்ந்து வருகின்ற யானையினை வீழ்த்தற்கல்லாமல், பிறவற்றைக் கொல்லுதற்கு, இவன், விளங்கும் இலையினை யுடைய தன் வேலினை ஏந்துபவன், அல்லனைப்போல விளங்கு கின்றான்!” என்பது செய்யுளின் பொருள்.

81. யானை நவில் குரல்

கோட்டை மதில்களின் மேலாக, அங்கங்கே உயர்முடன் அமைந்த சிறுசிறு அமைப்புக்கள் விளங்கும். அவை, கோட்டை மதிலின் காவல் வீரர்கள் தங்கியிருந்து பகைவரது வருகையினை நோக்கியிருத்தற்குரியன. அவற்றுள் ஒன்று சேரப்படையினரின் தாக்குதலுக்கு ஆற்றாது வெடிப்புக் கண்டது.

அந்த வெளியின் வழியாகக் கதிரவனின் ஒளிக்கதிர்கள் கோட்டைக்குள் நுழைந்து விழுந்தன. ஒளிசுடரும் அந்தக் கதிர்த்தோற்றத்தைப் போல விளங்கும் வெள்ளிய தன் வேலினை ஏந்தியவனாக, மற மாண்பினைக் கொண்ட இளையோன் ஒருவன், தன் குதிரை மீதமர்ந்தவனாக வந்து அவ்விடத்தே நின்றான். - - இடிந்து விழாது அற்றுப்போய் விட்டிருந்த அந்த நோக்கு ஞாயிலினுள்ளிருந்து வந்து நின்ற அவனைக் கண்டதும், படைமறவர் ஆரவாரிக்கின்றனர். -

“அவன் கையிடத்ததான ஒள்ளிய வேற்படையினை இகழ்தலைச் செய்யாதீர்கள். மிகுதியான சீர்மையினைக் கொண்ட, வானத்தைப் பொருதும் நெடிய கொற்றக் குடையினையுடையவன் நும் வேந்தன். அவன், இவன் கையிடத்ததான திண்ணியதும் கூரியதுமான வேற்படை