பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

தகடூர் யாத்திரை


“இதனை அறிந்தாயினும் நீவிர் அகன்று போவீராக! என்பது குறிப்பு. -

உண்டது, கள்ளும் அன்று களிப்பட் டனனே, ஊர்ந்தது, புள்ளும் அன்று பறந்தியங் கும்மே; மேலோர், தெய்வம் அல்லன் மகனே; நொய்தாங்குத் தெரியலர் எடுத்த பாசிலைக் கண்ணி வெருவத் தக்க வேலி னோனே; வேலே, பைய நிமிர்ந்து பருந்தின் ஓடிக் கழிந்தார்த் தன்றவன் எறிந்ததை கழறொட் டேந்துவரை யிவரும் புலிபோல் வேந்தர்வந் தூரும் வெஞ்சினக் களிறே. (புறத் 137) w கழிந்த போரின்கண் அவன் ஆற்றிய மறச்செயலினது மாண்பினை எடுத்துப்போற்றி, தகடுர் மறவர்கள், சேரர் அஞ்சுமாறு அங்ங்னம் முழக்கினர் என்று கருதுக

36. யானைக் கூறு அளக்கும்!

தகடூர் மறவர்கள் இங்ங்னம் அணியணியாகத் களத்தே வந்து போரிட்டுச் சேரர்க்கும் பெரும் அழிபாட்டை விளைவிக்கின்றனர். எனினும், சேரரது படை மறவரும் ஒத்த ஆண்மையுடையவராதலாலும் பெருக்கத்தவராதலாலும் தம்முடைய குறிக்கோளை நிறைவேற்றும் உறுதியுடன் விளங்குகின்றனர். . - .

ஒரு சமயம், இளமையும் செருக்கும் கொண்டவனாக மறவன் ஒருவன், தகடுர்ப் படையணிகளின் முன்னணியில் வந்து தோன்றுகின்றான். அவனுடைய தோற்றத்தைக் கண்டதும், சேரர் படையணி கலகலக்கிறது. தகடுர் மறவர்கள் களிகொண்டு ஆரவாரிக்கின்றனர். - _.

சேரத் தளபதிகளுள் ஒருவன், அந்தக் காட்சியைக் கண்டு மலைக்கின்றான். "அவன் யார்?' எனத் தன் அருகிருந்தாரை வினவுகின்றான். அவர்களுள் ஒருவன், அவனை முன்னர் நன்கு அறிந்திருந்தவன், கூறுகின்றான்.

"தலைவனே! * -

“வாயிற்கண் அமைந்துள்ள நெடிய திண்ணையின் மேலாக ஏறிநின்று, பெண்கள் நிலைவாயிலில் அழகுடன் புதுப்பூண் இடப்பெற்றுப் போர்க்குச் செல்லும் தம் கணவன்மாரோடு ஊடியவராகச் சிந்திய கண்ணிர் வெள்ளத்தைப் போல, ஒன்றுடன் ஒன்று கலந்து ந்ெருங்கிக் கிடக்கும் அழகிய